ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் விவகாரம் தொடர்பாக சமூகநீதித் துறை விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான அவரது பி. எச்.
டி (Ph. D) படிப்பிற்காக மொத்தம் ரூ. 36 லட்சம் கல்வி உதவித்தொகை ஒதுக்கப்பட்டதாகத் துறை தெரிவித்துள்ளது.
இதில் ரூ. 5,01,638 பல்கலைக்கழக வங்கிக் கணக்கிற்கும், மீதமுள்ள ரூ. 30,98,362 மாணவரின் வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் விமானக் கட்டணங்களைத் தவிர்த்து, ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காக வழங்கப்பட்ட ரூ. 27,40,140-க்கான செலவுப் பட்டியலை (Voucher) சமர்ப்பிக்குமாறு மாணவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், இரண்டாம் ஆண்டிற்கான (2026-2027) உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று மாணவர் கோரி வந்தார்.
மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டாம் ஆண்டிற்காக ரூ. 12 லட்சம் விடுவிக்கப்பட்டது. இதில் ரூ.
5. 57 லட்சம் பல்கலைக்கழகக் கணக்கிற்கும், ரூ. 6.
65 லட்சம் மாணவரின் கணக்கிற்கும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிச் செலவினங்களுக்காக ரூ. 19.
50 லட்சம் கோரி மாணவர் சமர்ப்பித்த உத்தேசப் பட்டியலை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பதிவாளர் பரிந்துரைக்கவில்லை என்று துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், முதலாம் ஆண்டிற்கான செலவினங்களில் ரூ. 8,17,962-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பதால், அது குறித்து விளக்கம் கேட்டு மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆராய்ச்சிச் செலவினங்களுக்கான ரூ. 19.
50 லட்சம் கோரிக்கையைப் பரிந்துரைத்து அனுப்புமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திடமிருந்து பதில் வந்தவுடன் உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று மாணவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தச் சூழலில், மின்னஞ்சல் கிடைத்த பிறகும், சமூக வலைதளத்தில் (எக்ஸ் தளம்) உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட காணொளியை மாணவர் பதிவிட்டுள்ளதாகச் சமூகநீதித் துறை தெரிவித்துள்ளது.

