ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
ஈரான் போர் காலத்தில் முடக்கியிருந்த ஹோர்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியபோது, ஈரான் ராணுவம் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் நீரிணை மிகவும் முக்கியமானது.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்தது.
மார்ச் 9 அன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக 119 அமெரிக்க டாலர்களை எட்டியது. அதன் பிறகு சற்று குறைந்தாலும், 90 டாலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, நேற்று 87.33 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, ஒரே நாளில் 4.70% சரிந்து 83.59 டாலராக விற்பனையாகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த விலையாகும். ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதால், உலகளாவிய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை விரைவில் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0Likes
0Dislikes
