இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, 2026-2027 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) நாடு முழுவதிலும் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
இந்த நான்கு மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 5. 95 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை தமிழ்நாடு ஈட்டியுள்ளது. கடந்த 2025-2026 நிதியாண்டில் ஈட்டப்பட்ட 2.
7 பில்லியன் டாலர் முதலீட்டுடன் ஒப்பிடுகையில், இது இருமடங்கு வளர்ச்சியாகும். முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா (4. 22 பில்லியன் டாலர்), டெல்லி (2.
67 பில்லியன் டாலர்), கர்நாடகா (2. 11 பில்லியன் டாலர்) மற்றும் குஜராத் (1. 30 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரத்தை 1. 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் அண்மையில் லண்டன் பயணம் மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்த இந்தப் பயணம் சில சர்ச்சைகளைச் சந்தித்தாலும், அதன் பயனாக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் 15,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் வாயிலாக 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




