கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் வாகனச் சோதனையின் போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வந்த காரை நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூவர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். இதைக் கண்ட தலைமைக் காவலர் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக்கொண்டு சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்.
அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் உதவியுடன் அந்தக் கார் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. விசாரணையில், பெங்களூருவில் இருந்து 233 கிலோ குட்கா பொருட்களைக் கடத்தி வந்தது உறுதியானது. பாபு தாரா, ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அவரை நேரில் வரவழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் C ஜோசப் விஜய், அவரது வீரத்தைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




