ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக ராமேஸ்வரம் அருகே உள்ள மாணிக்கனேரி பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விமான நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான தளம் சார்ந்த அனுமதியை (Site Clearance) பெறுவதற்காக, மத்திய அரசிடம் விண்ணப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

