தேர்தல் காலத்தில் தனிநபர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தெருவையே விலைபேசும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதில் பல அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குக்கும் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். குறிப்பாக, செல்போன் செயலிகளான போன் பே மற்றும் ஜிபே மூலமாகவே இந்த பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் நடைபெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.




