மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி, தவெக 36.0 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதிமுக 31.0 சதவீத வாக்குகளுடனும், திமுக 25.8 சதவீத வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 3.8 சதவீத வாக்காளர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், 2.3 சதவீதத்தினர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.





