ETN NewsNews. Trust. Impact.
FIFA 2026

ஃபிபா உலகக்கோப்பை: ஸ்பெயினை கோல் அடிக்கவிடாமல் தடுத்த கேப் வெர்டே

16 ஜூன், 2026, 03:47 AM
பிரமாண்டமாக நடைபெற்று வரும் ஃபிபா உலகக்கோப்பை தொடரில், குரூப் H பிரிவின் முதல் போட்டி எதிர்பாராத முடிவை எட்டியது. கால்பந்து தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும், 64-வது இடத்தில் உள்ள கேப் வெர்டே அணியும் மோதின. அசுர பலம் கொண்ட ஸ்பெயின் அணி, கேப் வெர்டேவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி பந்தை 70% நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கேப் வெர்டே கோல்போஸ்ட்டை நோக்கி தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடியது. ஸ்பெயின் அடித்த பல பந்துகள் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியதால் வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் டெய்லான் லிவ்ரமென்டோ (DAILON LIVRAMENTO) தடுப்பு அரணாக நின்று, ஸ்பெயின் அணியின் கோலை நோக்கிய 7 ஷாட்களை திறம்பட தடுத்தார். இறுதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ஸ்பெயின் அணி 27 ஷாட்கள் அடித்தும், 755 வெற்றிகரமான பாஸ்களை செய்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூன்டே காஸ்டிலோ (Luis de la Fuente Castillo) அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கேப் வெர்டே அணியை சிறிய அணி என எடைபோட்ட அவர், காயங்களைத் தவிர்க்க தனது முக்கிய அட்டாக்கிங் வீரர்களான லாமின் யமால் (Lamin Yamal) மற்றும் நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) ஆகியோரை மாற்று வீரர்களாக அமரவைத்தார். ஸ்பெயின் கோல் அடிக்க திணறிய நிலையில், ஆட்டத்தின் 71 மற்றும் 87 நிமிடங்களிலேயே அவர்களை களமிறக்கினார். காஸ்டிலோவின் இந்த முடிவுகள் ஆட்டத்தின் சமநிலைக்கு வழிவகுத்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
1Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...