நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆயிரம் மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரை ரத்து செய்துவிட்டு, அடுத்த நாளே மீண்டும் நடைமுறைப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். அரசு வெளியிடும் டெண்டர், அரசுக்கே தெரியாமல் எப்படி ரத்து செய்யப்படுகிறது என்பது புரியவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.



