2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதிய ரக வேட்டி மற்றும் சேலைகளுக்கான நெசவுக்கூலியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பெடல் தறி மூலம் நெய்யப்படும் சேலைக்கு ரூ.125.72-ஆகவும், வேட்டிக்கு ரூ.49.99-ஆகவும் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விசைத்தறி மூலம் நெய்யப்படும் சேலைகளுக்கு ரூ.54.81-ஆகவும், வேட்டிகளுக்கு ரூ.23.34-ஆகவும் நெசவுக்கூலி உயர்த்தப்பட்டுள்ளது.



