போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் எம். சுகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பூபாலனின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கை மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் அவர் உடனடியாகப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பூபாலனுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




