அபிஜீத் திப்கே மற்றும் நேஹா போரா ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்ற செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். போராட்டங்களை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் அந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



