தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் 'போதைப்பொருளைத் தவிர்த்து விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள்' என்று மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அவரது கட்சியினரோ முதலமைச்சரின் பேச்சைக் கேட்காமல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என விமர்சித்துள்ளார்.



