ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்தன.
கூகுள் வரைபடத்தில் சென்னையின் பல்வேறு சாலைகள் போக்குவரத்து நெரிசலைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. கிண்டி, அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



