இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.(இந்திய நேரப்படி 8.57 மணிக்கு) இதன் மையப்பகுதி மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலுவிற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் (28.5 மைல்) தொலைவில் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருள்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.2 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நில அதிர்வு தொடங்கி ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அவசரகால குழுக்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு!
0Likes
0Dislikes
