சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்களைக் கடந்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் வெறும் 5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 5.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்கள் எடுத்த சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து இந்தியா தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் சதம் விளாசி அவுட்டானார் அபிஷேக்.
ஆண்கள் டி20 சர்வதேச (T20I) போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள்: • 5 - கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) • 5 - ரோஹித் சர்மா (Rohit Sharma) • 4 - கரன்பீர் சிங் (Karanbir Singh) • 4 - பில் சால்ட் (Phil Salt) • 4 - சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) • 4 - அபிஷேக் சர்மா (Abhishek Sharma)


