செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நிலவும் உள்கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மின் வாரிய துணை மின் நிலையம் முதல் புதுப்பாக்கம் சந்திப்பு வரையிலான மூன்றாவது குறுக்கு சாலையை தரம் உயர்த்தும் பணிக்கு ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்பணி வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
பூங்காவின் முதலாவது பிரதான சாலையில் உள்ள வடிகால்களைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. மேலும், சிப்காட் பூங்கா எல்லையை புதுப்பாக்கம் கிராமத்துடன் இணைக்கும் 1.50 கிலோமீட்டர் நீளமுள்ள கிராம சாலைகளை மேம்படுத்துவது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தொழில் பூங்காவில் அனைவருக்கும் வலுவான மற்றும் தடையற்ற உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



