இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி 370 புள்ளிகள் உயர்ந்து 23,810 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்ந்து 76,917 புள்ளிகளிலும் நிலைபெற்றன.
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது இந்த உயர்வு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


