ரூ.2.08 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.





