சேலத்தில் மின் நுகர்வோர் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறாக மிக அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஷர்புதீன் என்பவர் தனது மின் பயன்பாட்டிற்காக வழக்கமாக ரூ.600-க்கும் குறைவாகவே கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு தற்போது ரூ.22,500 மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ரசீது வந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.




