சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக போக்குவரத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். முதலமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.





