தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு தமிழ்நாடு அரசு நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





