கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது தொடர்பான வழக்கில், விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இது குறித்த விளக்கத்தை மனுவாகத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




