தமிழகத்தில் உள்ள 14,141 பாசன ஏரிகளில் 763 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், நெல்லை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் உட்பட மொத்தம் 1,461 ஏரிகள் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன.
மாநிலத்தின் நீர்வரத்துத் துறையின் பராமரிப்பில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவான 224 டி.எம்.சி.-யில், தற்போது 81.65 டி.எம்.சி. (36.40%) நீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 15 முக்கிய நீர்நிலைகளில் 85% நீர் இருந்த நிலையில், தற்போது அது 36.2% ஆகக் குறைந்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 6 நீர்நிலைகளில் தற்போது 5.27 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டை விட 50% குறைவான அளவாகும்.
மேலும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேட்டூர், பவானிசாகர், பரம்பிக்குளம், சாத்தனூர், வைகை, பெரியாறு மற்றும் பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் நீர் குறைந்து விட்டது.




