திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ள நவம்பர் 24ஆம் தேதி, அங்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நவம்பர் 27ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




