ராக்கஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் 'GTA 6' வீடியோ கேம், 13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு நவம்பர் 19 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. புளோரிடா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனை நகரத்தில் நடக்கும் குற்றச் செயல்களை மையமாகக் கொண்ட இந்த கேம், உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கேமில் நடப்பவை கற்பனை மட்டுமே என்றும், அவற்றை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாண காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், கார் திருட்டு மற்றும் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் நிஜ வாழ்க்கையில் கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என காவல்துறை தெரிவித்துள்ளது. கேமில் '5 ஸ்டார்' பெறுவது போன்ற செயல்களுக்கு நிஜத்தில் எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும், கேமிங் திறமைகளை நிஜ வாழ்க்கையில் சோதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கார் திருடுவதும், காவல்துறையிடமிருந்து தப்பி ஓடுவதும் சட்டவிரோதமான செயல்கள் என்பதால், கேமை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





