டிசம்பர் 15 முதல் வாகனக் காப்பீட்டு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, வாகனக் காப்பீடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இனி சொந்த வாகன சேத காப்பீடு மற்றும் பயணிகளுக்கான தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை கட்டாயமில்லை; இவை வாகன உரிமையாளர்களின் விருப்பத்தேர்வுக்கு உட்பட்டவை என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு காப்பீடு மற்றும் உரிமையாளர் விபத்து காப்பீடு ஆகியவை தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளன. காப்பீட்டு பிரீமியம் தொகையைத் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் புதிய மற்றும் பழைய வாகனங்களின் காப்பீடு புதுப்பித்தலுக்கும் பொருந்தும்.


