தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (குரூப்-4) பணிகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8-ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 68-ன் அடிப்படையில், அனைத்துப் பிரிவினருக்கும் வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டது. இந்த வயது வரம்பு தளர்வைத் தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையச் செயலாளர் ப. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.



