ஹரியானாவில் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு காயமடைந்த ஆறு வயது சிறுமி, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





