நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படமான ‘ராமாயணம்: பாகம் 1’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.4,000 கோடி எனக் கூறப்படும் நிலையில், அதன் வசூல் நிலவரத்தைத் திரையுலகினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, சீன சந்தையில் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், 20,000 முதல் 25,000 திரைகளில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் திரைப்பட வர்த்தக நிபுணர் ரதி தெரிவித்துள்ளார்.





