புது தில்லியில் காற்று மாசு அளவு புதன்கிழமை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள தினசரி அளவை விட இது 30 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட அடர்ந்த புகைமூட்டம் காரணமாக தலைநகர் முழுவதும் பார்வைத்திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்தவ்ய பாதை மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


