அரசியல் விவகாரங்களை தவெக-திமுக இடையிலான மோதலாக மட்டும் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
மக்கள் நலன் சார்ந்தே எந்தவொரு பிரச்சினையையும் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திமுகவின் தோல்விக்கு அக்கட்சி பின்பற்றிய நவ தாராளமயக் கொள்கைகளே முக்கிய காரணம் என்றும், அதே பாதையில் தற்போதைய தவெக அரசும் பயணிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.



