வங்கக்கடலில் வரும் 13-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வகை மீன்பிடிப் படகுகளும் வரும் 12-ம் தேதிக்குள் காசிமேடு துறைமுகத்திற்கு வந்து சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



