துணை சபாநாயகர் தன்னைத் தாக்கியதாக எழுந்த புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் நபர், மதுக்கடை ஒன்றில் மது வாங்கச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அந்த நபர், தான் மதுக்கடையில் இல்லை என்றும், போதையில் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள், அவர் கூறிய கருத்துக்கு மாறாக அமைந்துள்ளதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




