கடலூரில் காவல்துறை அதிகாரியை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
இளம் ரத்தத்தில் உணர்ச்சிவசப்பட்டு காவல்துறை மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பது தாமதமாகத்தான் தெரியவரும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். சட்டத்தை மீறி காவல்துறை அதிகாரிகளைத் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.




