தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இணைந்து 'ஆபரேஷன் பெங்களூரு' என்ற பெயரில் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்த்த அதே பாணியில், தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்க மறுத்தால் நீதிமன்றத்தை நாடவும் பாஜக தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டி, ஆட்சியை கலைப்பதற்கான சூழலை உருவாக்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி பண்டிகையின் போது நடைபெற்ற கொலைச் சம்பவங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் அறிக்கை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.





