தமிழ்நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2026 செப்டம்பர் நிலவரப்படி, மாநிலத்தில் ஒரு கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 305 பேர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாநில மக்கள் தொகையில் 19.5 சதவீதமாகும், அதாவது ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 59 லட்சத்து 88 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 57 லட்சத்து 66 ஆயிரம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதில் டைப்-2 நீரிழிவு மட்டும் உள்ளவர்கள் 60 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் என்றும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் 57 லட்சத்து 33 ஆயிரத்து 517 பேர் என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீரிழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு 12 சதவீதத்திலிருந்து 19.5 சதவீதமாக உயர்ந்துள்ளது பொது சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது.





