ETN NewsNews. Trust. Impact.
Sports

இந்தியா - ஆப்கானிஸ்தான்: 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, தொடரை கைப்பற்றியது

17 ஜூன், 2026, 04:54 PM
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்தது. 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...