தாம்பரம் அருகே காமராஜபுரம் பகுதியில் நீண்ட நேர மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதாகவும், கடந்த 15 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். போலீசார் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
0Likes
0Dislikes
