தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18) தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் அர்லேக்கர் உரையாற்றினார். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) அவை மீண்டும் கூடியது. இன்றைய அமர்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சி. ராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க. ஆறுமுகம், பெ. கண்ணன், அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, முன்னாள் சட்டமன்றச் செயலாளர் சி.கு. ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0Likes
0Dislikes
