மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு திமுகவின் உறுதியான எதிர்ப்பு நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகக்கூடாது என்பதே தங்கள் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி காவிரி விவகாரத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியதையும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதிலும் மு.க. ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான முதல்வர் விஜயின் தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கர்நாடகா மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரின் அளவை முறையாக வெளியிடுவதில்லை என்று குற்றம் சாட்டினார். காவிரி நீரை போராடிப் பெற வேண்டிய நிலை உள்ளதாகவும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சிப்பது தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் செயல் என்றும் அவர் எச்சரித்தார்.
0Likes
0Dislikes
