ETN NewsNews. Trust. Impact.
Top Stories

நான் முதல்வன் சாதனைகளை அழிக்க முடியாது - மு.க.ஸ்டாலின்

20 ஜூன், 2026, 10:42 AM
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதல்வன்" திட்டத்தின் சாதனைகளை மக்கள் மனதிலிருந்து அழிக்க முடியாது என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். "நீங்கள் நான் முதல்வன் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், அதில் உள்ள பதிவுகளை நீக்கலாம். ஆனால், ஜெனிபர் போன்ற ஆயிரக்கணக்கானோரின் கனவுகளை நனவாக்கிய இத்திட்டத்தின் சாதனைகளையும், அதற்கான நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்கவே முடியாது. அவை அவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் "படிங்க, படிங்க, படிங்க" என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அவ்வாறு படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவவே "நான் முதல்வன்" என்ற தனது கனவுத் திட்டத்தைத் தொடங்கியதாகவும் ஸ்டாலின் கூறினார். இத்திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் செயல் என்றும் அவர் எச்சரித்தார்.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...