இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில், குரூப்-1 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் களமிறங்குகிறது. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால், அரையிறுதி வாய்ப்பை பலப்படுத்தும் இந்த முக்கியமான ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0Likes
0Dislikes
