வந்தவாசி அருகே உள்ள செய்யார் கிராமத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த தாயார் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகை திருடப்பட்டது. இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கோயிலின் அர்ச்சகரான ரகுராமன் (45) என்பது விசாரணையில் தெரியவந்தது. மாத ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்த அவர், தங்கியிருந்த லாட்ஜில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


