காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த முன்முயற்சி எடுத்தது நான்தான். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


