அசாமின் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் மோதி தீப்பிடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஸ்குவாட்ரன் லீடர் பிரசாந்த் சிங், விமானி லெப்டினன்ட் சுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர ஷர்மா, கே.மரம் குமாவத் மற்றும் டேனிஷ் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். துணை விமானி காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து நடந்த இடத்தை இந்திய விமானப்படையின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


