காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அவர் ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றிருந்தார்.
பெறப்பட்ட கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதையடுத்து, இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



