இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணக் கடற்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை படகு ஒன்று தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். சுராபயாவிலிருந்து மக்காசர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் படகில் மொத்தம் 271 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். மதுரா தீவுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான படகிலிருந்து இதுவரை 225 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனதாகக் கருதப்படும் 41 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



