பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள கபால் காவல் நிலையத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக சையது ஷெரீப் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காவல் நிலைய நுழைவாயிலில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய நபரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததாக சுவாத் மாவட்ட காவல் அதிகாரி உமர் கான் தெரிவித்தார்.
இந்த வெடிப்புச் சம்பவம் நடந்தபோது, அப்பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக கபால் சௌக் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


