உலகளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி திடீரென நீக்கப்பட்டது. இதனால் ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்தச் செயலி மீண்டும் ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டது.
செயலியில் சிறுவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டதால், தற்காலிகமாக நீக்கப்பட்டதாக டெலிகிராம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, செயலி மீண்டும் ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


